விளாத்திகுளம் (புதூர்),தூத்துக்குடி,எட்டயபுரம்,கோவில்பட்டி,கழுகுமலை,திருச்செந்தூர்,உடன்குடி

விளாத்திகுளம்  புதூர்(விளாத்திகுளம்)
இந்தியாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூட்சி விளாத்திகுளம் ஆகும். புதூர்(விளாத்திகுளம்)
இந்த ஊரில் உள்ள மக்கள் தொகை 8037 - 2001ம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி. கல்வியறிவு69 சதவீதம் புதூர்(விளாத்திகுளம்)

தூத்துக்குடி -  மாவட்டத் தலைமையகம்    
தமிழ்நாடு - மாநிலம்
வட்டங்கள் :- எட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம்

ஊராட்சி ஒன்றியங்கள் :- தூத்துக்குடி · கருங்குளம் · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம்.

மாநகராட்சி - தூத்துக்குடி
நகராட்சி:- கோவில்பட்டி · காயல்பட்டினம்.
பேரூராட்சிகள் :- ஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · கழுகுமலை · கணம் · கயத்தார் · நாசரெத் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · ஸ்ரீவைகுண்டம் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்


விளாத்திகுளம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
விளாத்திகுளம் தாலுகா
எட்டயபுரம் தாலுகா
ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதி
குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, முத்துராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், குமாரஎட்டையபுரம், எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், முள்ளூர், முத்துக்குமாரபுரம்,வேப்பலோடை, தெற்கு கல்மேடு, வேடநத்தம்,கொல்லம்பருப்பு, சந்திரகிரி, ஜெகவீரபாண்டியபுரம், க.தளவாய்புரம், வெள்ளாரம், பி.துரைச்சாமிபுரம், கீழமுடிமன், கீழமங்கலம், சில்லாங்குளம், எஸ்.குமாரபுரம், கே.சண்முகபுரம், டி.துரைசாமிபுரம் மற்றும் பட்டிணமருதூர் கிராமங்கள்

விளாத்திகுளம் தொகுதியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்
2006-P.சின்னப்பன்(அதிமுக)    
2001-N.K.பெருமாள்(அதிமுக)    
1996-K.ரவி சங்கர்(திமுக)    
1991-N.C.கனகவல்லி(அதிமுக)    
1989-K.K.S.S.R.இராமச்சந்திரன்(அதிமுக(ஜெ))    
1984-குமர குருபர ராமநாதன்(திமுக)    
1980-R.K.பெருமாள்(அதிமுக)
1977-R.K.பெருமாள்(அதிமுக)  



விளாத்திகுளம் - சுதந்திர தினம் கொண்டாட்டம்! 

விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் சுதந்திர  தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.


இதை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் ஸ்ரீஅம்பாள் கல்வி அறக்கட்டளை நிர்வாகி எஸ்.கே. சுப்பா ரெட்டியார் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாணவர்கள் தேசப்பற்று குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து நடைபெற்ற விழாவில், தேசபக்தி பாடல்களுக்கான குழு நடனமும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகத்தை பறைசாற்றும் விழிப்புணர்வு  நாடகங்களும், கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ஸ்ரீ அம்பாள் கல்வி அறக்கட்டளை தாளாளர் ஜி. வீமராஜ் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை கல்விக் குழு ஆலோசகர் டாக்டர் பெருமாள், பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன், விழா ஒருங்கிணைப்பாளர் பிரம்மஞானமுத்து பாரதி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் ஹாஜிமியான் அப்துல்காதர் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தேசியக்கொடி ஏற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள், ஜமாத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். குமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தேசியக் கொடியேற்றினார். இதில் பேராசிரியர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதல்வர் மரியசெல்வி தேசியக் கொடியேற்றினார். ஆசிரியர்கள் புனிதா உள்பட பலர் கலந்துகொண்டனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரகிருஷ்ணன், வட்டாட்சியர் அலுவலகம் முன் வட்டாட்சியர் ஜோதி, காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் ஏ.எஸ்.பி. முரளிரம்பா, அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பூவேஸ்வரி, சார்பு நீதிமன்ற அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயசுதாகர், வீரணன் ஆகியோர் முன்னிலையில் சார்பு நீதிமன்ற நீதிபதி பாண்டியராஜ் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.

நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அதன் தலைவர் ராஜேஷ்கண்ணன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவி பேச்சியம்மாள் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.

நாடார் நடுநிலைப் பள்ளியில் நாடார் உறவின்முறை சங்கப் பொருளாளர் செல்வராஜ், நாடார் மேல்நிலைப் பள்ளியில் நாடார் உறவின்முறை சங்கச் செயலர் ராஜேந்திரபிரசாத், காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நாடார் உறவின்முறை சங்க முன்னாள் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நாடார் உறவின்முறை சங்கப் பொருளாளர் செல்வராஜ், எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.ஆர்.ராஜசேகர் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.


மதுவிலக்கு யாரால் கொண்டு வரப்பட்டது ? எப்பொழுதெல்லாம் கொண்டுவரப்பட்டது
எலி மருந்து சாப்பிட்டவர் சாவுக்கு பயந்து மருத்துவமனைக்கு ஓடிய சம்பவம்?!
சோழ மன்னர்களின் பட்டியல்
பரிதாபம்! - குரங்கு சேட்டை! - குழந்தை இறந்தது!
பெண் மருத்துவருடன் உல்லாசம் அனுபவித்த போலிச் சாமியார் கைது!
ஸ்ரீ முத்தாலம்மன் கோவில்
ஸ்ரீ வீரசின்னையா கோவில் - தொலைந்த பொருள் திரும்ப கிடைக்க
இந்து கோவில்களும் அவைகள் இருக்கும் ஊர்களும்