ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் உள்ள ரஷித் புரா என்ற கிராமம் இருக்கிறது. அங்கு குரங்குகளின் தொல்லை நீண்ட நாளாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் ஒரு வீட்டின் அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 மாத பெண் குழந்தையை ஒரு குரங்கு தூக்கிச் சென்றது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் குரங்கை விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது குரங்கின் பிடியில் இருந்து நழுவி குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. இதையடுத்து குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். குரங்கின் சேட்டையால் குழந்தை உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது
பரிதாபம்! - குரங்கு சேட்டை! - குழந்தை இறந்தது!
பரிதாபம்! - குரங்கு சேட்டை! - குழந்தை இறந்தது!