பெண் மருத்துவருடன் உல்லாசம் அனுபவித்த போலிச் சாமியார் கைது!


ஒடிசா: பெண் மருத்துவருடன் உல்லாசம் அனுபவித்த போலிச் சாமியார் சாரதி பாபா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் கட்டாக் நகர் பகுதியில் சாமியார் சாரதி பாபாவின் ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்நிலையில் சாமியார் சாரதி பாபா ஐதராபாத் ஓட்டல் ஒன்றில் தன் மனைவி என்று சொல்லிக் கொண்டு, பெண் மருத்துவர் ஒருவருடன் 2 நாட்கள் தங்கி இருந்ததாக தொலைக்காட்சி ஒன்று செய்தியை ஒளிபரப்பியது. இதனை அடுத்து கெண்டரபாராவில் நேற்று முன்தினம் சாரதிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. சாமியார் சாரதி பாபா குறித்து விசாரணை நடத்தும்படி முதல்வர் நவீன் பட்நாயக் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் சாமியார் சாரதி பாபா குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சில முக்கிய ஆவணங்கள், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. சாமியாரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது வங்கி கணக்குகள், புகைப்படங்கள், சிசிடிவி பதிவு உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இதனையடுத்து நேற்று போலீசார், சாமியார் சாரதி பாபாவை கைது செய்தனர்.பாலியல் வழக்கில் பிரபல சாமியார் கைது செய்யப்பட்ட விவகாரம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.