பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி-தை-புரட்டாசி- அமாவாசை-முன்னோர் இறந்த திதி அன்றும்,அமாவாசை அன்றும்
அமாவாசை-பித்ரு தர்ப்பணம்
முன்னோர் இறந்த திதி அன்றும்,
அமாவாசை அன்றும்
பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம்.
இயலாதோர், தெரியாதோர் ஆடி-தை-புரட்டாசி அமாவாசைகளில் செய்யலாம்.
ஒரு ஆண் பிறக்கும்போதே பெற்ற கடனாக பித்ருக் கடன் ஏற்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடும் முன்னோர் வழிபாடும் மிக மிக அவசியம். பித்ரு தர்ப்பணம் என்பது பல பெயர்களில் சங்க காலம் முதல் இருந்து வருகிறது. இன்று பித்ரு தோஷத்தால் தான் சரியான காலத்தில் கல்யாணமாகாமை, குழந்தையின்மை, குடும்ப உறவுகளில் சிக்கல், ஜாதக தோஷங்கள், எதிர்பாரா விபத்துக்கள்-நஷ்டங்கள், குல விருத்தியின்மை போன்றவை ஏற்படுகின்றன. பித்ரு வழிபாட்டின் முக்கியத்துவம் அறிந்து வெளிநாடுகளில் கூட பின்பற்ற துவங்கியுள்ளார்கள். நாமோ, பித்ரு பூஜைக்கு ஏராளமான அறிவியல் காரணங்களும் உள்ளன. பித்ரு தர்ப்பணம் என்பது ஒரு கடன். யஞ்யம். செய்யாதவர்களுக்கு பாவம் சேரும். அந்த கடனடைக்கும் சுமை பெண்களுக்கு இல்லை, ஆண்களுக்குத்தான்.
1.அந்தணர்களைக் கொண்டு முறையாக எள்ளும் நீரும் விட்டு, பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்யலாம். நதிக்கரைகளில் செய்வது விசேஷம்.
2.இயலாதோர், வீட்டில் முன்னோர்களுக்கு எளிமையான படையலிட்டு வணங்கி காக்கைக்கு எள் நீரும் தயிர் அன்னமிட்டு, பின்னர் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.
3. அதுவும் முடியாதோர் பசுவுக்கு அகத்திக் கீரை கொடுத்து முன்னோராக பாவித்து வழிபடலாம். ஆற்றோரம் சென்று உடலில் மண்ணை பூசி, கங்கையை நினைத்து மூழ்கி எழுந்து வழிபடுவதும் ஒரு முறையாக சொல்லப்படுகிறது.
4. இன்றைய தினம் குலதெய்வ வழிபாடு மாபெரும் புண்ணியம் தரும். முன்னோர்களுக்கு இந்த புண்ணியம் சேரட்டும் என்று ஏதாவது ஒரு நல்ல காரியம், தானம் செய்தல் நலம். புகை மது அசைவம் எதுவுமின்றி, இன்று ஒரு வேளையாவது விரதம் இருந்து பித்ரு பூஜை செய்ய வேண்டும். வீட்டில் உங்களுக்கு மூத்த தலைமுறை (அப்பா தாத்தா) இருந்தால் அவர்களே செய்ய வேண்டும், நாம் செய்ய கூடாது. பெற்றோர்களை கவனிக்காது அவர்கள் மனம் நோகும்படி செய்துவிட்டு பித்ரு பூஜை செய்வதில் எந்த பலனும் இல்லை!