பித்ரு தர்ப்பணம்

பித்ரு தர்ப்பணம் பஞ்ச மஹா யஞத்தின் (சம்ஸ்க்காரம் 23) கீழ் வரும் பித்ரு யஞத்தின் கீழ் வருகிறது

    பித்ரு தர்ப்பணம் என்பதற்க்கு பித்ருக்களை த்ருப்தி செய்வித்தல் என்று பொருள். எள்லாலும் தண்ணீராலும் இந்த யஞத்தை செய்ய வேண்டும். இது அவர்களை மகிழ்ச்சி மற்றும் உயர்ச்சி அடைய செய்யும் என்பது ஐதீகம்.

ஒவ்வொருவர் வீட்டிலும் ஐந்து படுகொலை களங்கள் உள்ளன
அவை அடுப்பாங்கரை,உலக்கை,துடைப்பம்,காரை மற்றும் தண்ணீர் பாத்திரங்களாம். இதன் மூலம் எண்ணற்ற கண்ணிற்க்கு தெரியாத உயிரினங்கள் மாண்டு போகின்றன. இதனால் ஒருவனுக்கு எண்ணற்ற பாபங்கள் வந்து சேர்க்கின்றன.  அதை ஈடு செய்ய தினமும் பஞ்ச மஹா யஞம் பரிந்துரைக்க பட்டுள்ளது. பித்ரு தர்ப்பணம் முன்னோர்களின் மூன்று தலைமுறையினருக்கு அவர்கள் உயர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் செய்யபடுகிறது. அவர்களை பித்ரு உலக தேவதைகளான வசு, ருத்ர, ஆதித்யர்களாக புக்னத்தில் வரித்து (எள்லாலும், தண்ணீராலும்) தர்ப்பணம் செய்யபடுகிறது. மந்திரத்தின் முடிவில் அர்ப்பணித்த தண்ணீர் அவர்கள் நிலைக்கேர்ப்ப அம்ருதமாகவோ, நெய்யாகவோ, தண்ணீராகவோ, பாலாகவோ,  புல்லாகவோ, ரத்தமாகவோ மாற்றிக்கொள்ளும் படி வேண்டிக்கொள்ளபடுகிறது (அவர்கள் தேவலோகத்திலோ, மனித ரூபத்திலோ அல்லது வேறு எந்த ரூபத்திலோ அவரவர்கள் கர்மாவை அனுசரித்து தற்சமயம் இருக்கக்கூடும்). அந்த உணவிர்க்கு “ஸ்வதா” என்று பெயர்.

எவனோருவன் ஸ்ராத்தம் சிரத்தையுடன் செய்கின்றானோ அவன் பிரஹ்மா, இந்திரன், ருத்ரன், அஸ்வினி குமாரன், சூரியன், விஸ்வேதேவர், பித்ரு கணங்கள், வசு கணங்கள்,  மருத் கணங்கள்,  ரிஷி கணங்கள், விலங்குகள், பசுக்கள் மற்றும் எண்ணில்லா கண்ணிற்க்கு புலப்படாத உயிரினங்களை மகிழ்ச்சி அடைய செய்கிறான். அதன் மூலம் இந்த பிரபஞ்சத்தையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறான்.
முன்பு மாத தர்பணங்களையும் முன்னோர்கள்  ஸ்ராத்தமாக செய்து வந்துள்ளார்கள். கால போக்கினால் நேரத்தை அனுசரித்து தீர்க்க தரிசிகள் இந்த நேரம் குறைந்த தர்ப்பண முறையை நமக்கு தந்தளித்துள்ளார்கள்.

பித்ரு தர்ப்பணம் ஐந்து பிரிவுகளாக கொள்ளபடுகிறது.
 1.   பிரஹ்ம யஞ தர்ப்பணம் ( சம்ஸ்க்காரம் - 21 ) - ஸந்த்யாவந்தனம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய கர்மா.
 2.   ஷண்ணவதி  (96) தர்ப்பணம் - ஒரு வருஷத்தில் 96 முறை செய்ய வேண்டிய கர்மா.
 3.   க்ரஹண தர்ப்பணம் - சூரிய / சந்திர க்ரஹண காலத்தில் செய்ய வேண்டிய கர்மா.
 4.   பரேஹணீ தர்ப்பணம் - பெற்றோர்களின் ஸ்ராத்த தின மறுநாள் செய்ய வேண்டிய கர்மா.
5.   குண்ட குழி தர்ப்பணம் - பெற்றோர்கள் இறந்த சமயத்தில் (10 நாட்கள்) செய்ய வேண்டிய கர்மா.