ஸ்ரீ வீரசின்னையா கோவில் - தொலைந்த பொருள் திரும்ப கிடைக்க

ஸ்ரீ வீரசின்னையா கோவில்
பொருட்கள் ஏதாவது தொலைந்தால் வீரசின்னையா கோவிலை வணங்கி வேண்டினால் அந்த பொருள் திரும்ப கிடைக்கும் என்பது இன்றளவும் சுற்று வட்டார கிராமங்களில் பிரபலமாகும். இதற்கு பரிகாரமாக வெல்லக்கட்டி கொண்டு வந்து இங்கு பூஜை செய்து பிரசாதமாக கொடுப்பது வழக்கமாகும். மேலும் இந்த கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹாசிவராத்திரி அன்று விஷேச பூஜைகள் நடைபெறும். அன்று ஊர் நாயக்கர் வீட்டில் இருந்து கரும்பு கட்டுகள்,மூங்கில் கூடைகளுடன் தேவராட்டத்தோடு அனைத்து பொது மக்களும் இந்த கோவிலில் பள்ளயப்பெட்டி பூஜையில் கலந்துகொள்வார்கள். இதில் குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை வேண்டி கரும்பினால் ஆன ஊஞ்சல் கட்டி வேண்டுவர். வேண்டிய பல பேருக்கு குழந்தை பாக்கியம் கிட்டியுள்ளது. மேலும் அன்று இரவு வீரசின்னையாவின் வாழ்க்கை வரலாறுகளை கம்பளத்து பெண்மணிகள் பாடல்களாக பாடுவார்கள். பின்பு மறுநாள் காலையில் அனைத்து மக்களும் கோவிலில் கூடி பள்ளயபெட்டி பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இந்த கோவிலில் மஞ்சள் பொடியையும் நிலத்தடி மண்ணையுமே விபூதியாக பூசிக்கொள்வார்கள்.(ஜமீன் கோடாங்கிபட்டி தூத்துக்குடி-விளாத்திகுளம் தாலுகா)விளாத்திகுளத்திலிருந்து மதுரை ரோட்டில் சரியாக 10 கிலோ மீட்டர் தொலைவில் ஜமீன் கோடாங்கிபட்டி இருக்கிறது.