விளாத்திகுளம் அருகே பரிதாபம்! - படிப்பில் ஆர்வம் இல்லை - பெற்றோர் கண்டிப்பு - பள்ளி மாணவன் தற்கொலை

 படிப்பில் ஆர்வம் இல்லை - பெற்றோர் கண்டிப்பு - பள்ளி மாணவன் தற்கொலை-  விளாத்திகுளம் அருகே பரிதாபம்

விளாத்திகுளம் அருகே உள்ள எம்.சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் விளாத்திகுளம் பக்கத்தில் இருக்கும் எம்.சண்முகாபுரம் பகுதியில் வசிப்பவர் சுப்புராஜ் (45), இவர் ஒரு ஆடு மேய்க்கும் தொழிலாளி. அவருடைய மனைவி கிருஷ்ணம்மாள் (34). இவர்களுடைய மகன் பெயர் நாகமுத்து (13). வேம்பார்ல் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் இந்த பையன் 8-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். இந்த பையன் நாகமுத்துவுக்கு படிப்பில்  ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால் அவன் ஒழுங்காக படிக்கவில்லையாம். இதனால் அவனுடைய பெற்றோர்கள்  நன்றாக படிக்க வேண்டும் என்று நாகமுத்துவிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்கள். இப்படி சொன்னதால் அந்த நாகமுத்து மனமுடைந்து அருகில் இருந்த அவனது தாத்தா கோபால் வீட்டுக்கு போய் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டான் என்று சொல்லப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேலாகியும் வீட்டிற்கு வராமல் இருந்ததால் அந்த பையன் நாகமுத்துவை அவனது பெற்றோர் தேடினர்.  சுப்புராஜ், கிருஷ்ணம்மாள் ஆகியோர் வீட்டுக்குச்  தாத்தா வீட்டுக்கு சென்று பார்த்த போது, நாகமுத்து தற்கொலை செய்து கொண்ட விவரம் தெரிய வந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால் கதறி அழுதனர். இந்த தகவல் அறிந்த காரணத்தினால் சூரங்குடி போலீசார் அந்த சம்பவயிடத்துக்கு போனார்கள். அப்புறம் நாகமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக விளாத்திகுளம் என்ற ஊரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த விசயம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.